சாலையோர ஓட்டல்..! கயிற்று கட்டில்..! டின்னரை எளிமையாக முடித்த தல அஜித்..! வைரல் புகைப்படம்!

நடிகர் அஜித் கயிர் கட்டிலில் அமர்ந்து சாதாரணமாக சிற்றுண்டி சாப்பிடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது


ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் பாலக்காடு இன்னும் பகுதியில் சுப்ரமணியம் மோகினி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் நடிகர் அஜித். இவர் அதிகபட்சம் படித்ததே பத்தாம் வகுப்பு வரை தான். அதை தாண்டி படிப்பில் ஆர்வம் இல்லாத அஜித் பைக் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

மேலும் இவர் படித்த பள்ளிக்கு அருகாமையில் சாலையின் ஓரத்தில் இருந்த மெக்கானிக் ஷெட்டில் பணிபுரிய ஆரம்பித்தார். பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுதே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி பல முறை அலைந்துள்ளார். அந்த வகையில் சிறுசிறு விளம்பர காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

அதை பயன்படுத்திக் கொண்டு 1990 ஆம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவராக நடித்தார். 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது காதல் கோட்டை திரைப்படம் தான்.

அதற்குப் பின் அவரது திரையுலக வாழ்க்கையை யாரும் எதிர்பாராத அளவிற்கு மாறியது. எந்த ஒரு அடிப்படை சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகிற்கு வந்த நடிகர் அஜித் இன்று யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இவருக்கு மெக்கானிக் பைக் ரேஸ் கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் இன்றளவும் ஆர்வம் இருந்து கொண்டே வருகிறது.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த தருணத்திலேயே தனது மனைவி ஷாலினியை செட்டில் கார்க் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு நேரம் கிடைக்கும் சமயங்களில் இவரும் கார் ரேஷ்களுக்கான பயிற்சிகளில் ஈடுபடுவது உண்டு. மேலும் இவர் f1 ரேஸ்களில் அதிகமாக பங்கெடுத்து அதில் ஒரு சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அந்த வகையில் இவருடன் கார் ரேஸில் போட்டியிடும் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்ட பிரபல போட்டியாளர்கள் உடன் நட்பை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். அதன்படி அஜித் தனது மனைவியுடன் நரேன் கார்த்திகேயன் திருமண விழாவிற்கு அருப்புக்கோட்டை வரை சென்று பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் அஜித் சென்னை டு ஓசூர் உள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி கார் ரேஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் ரேசில் ஈடுபடும்பொழுது சாலையோரங்களில் இருக்கக்கூடிய உணவகங்களில் அமர்ந்து சாதாரணமாக உணவு உண்பார். குறிப்பாக இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரமேஷ் என்பவரது சாலையோர உணவகத்தில் உணவு சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது.

ஒருமுறை அவரது கைப் பக்குவத்தை சுவைத்த நடிகர் அஜித் எப்பொழுது அவ்வழியாக சென்றாலும் ரமேஷின் உணவகத்தில் உணவு சாப்பிடாமல் செல்ல மாட்டார். அந்த வகையில் கிருஷ்ணகிரி ரமேஷ் உணவகத்தில் நடிகர் அஜீத் கயிறு கட்டிலில் சாதாரணமாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஆய்வு செய்ததில் அந்த புகைப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அது தற்போது வைரலாகி வருகிறது என்பது தெரிய வந்து உள்ளது. மேலும் சென்னை டு ஓசூர் நெடுஞ்சாலையில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக எந்த ரேஸிலும் ஈடுபடவில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்று உள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்பாக சென்னை டு புனே நெடுஞ்சாலையில் நடிகர் அஜித் ரேஸில் ஈடுபட்ட பொழுது சாலையோர டீ கடைகளில் சாதாரணமாக டீ குடிப்பது போன்ற புகைப்படங்கள் இதேபோன்று வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.