தேசிய கொடி ஏற்றாத ஆன்டி இன்டியன் ஸ்டாலின் மீது நடவடிக்கை மோடிஜி?

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேசியக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். சென்னை தியாகராயநகரில் தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தேசிய கொடி ஏற்றி வைத்தார். சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் கொடியேற்றி வைத்தார்கள்.

இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்துள்ளார். 

இந்த விவகாரம் இப்போது தி.மு.க.விலேயே வில்லங்கத்தைக் கிளப்புகிறது. ஆம், “சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாடுவதுதான் பெரியாரின் கொள்ளை. அதைத்தான் தலைவர் கருணாநிதி கடைபிடித்து வந்தார். இப்போது தளபதியும் அதைத்தான் பின்பற்றி வருகிறார்’’ என்கின்றனர் உடன்பிறப்புகள்.

கருணாநிதி தமிழ்நாட்டில் மட்டும்தான் தலைவராக இருந்தார். இப்போது ஸ்டாலின் தேசத் தலைவராக மாற முயற்சி செய்கிறார். அதனால் தேசக் கொடியை ஏற்றினால்தான் மரியாதை என்று அவர் கட்சியினரே ஆதங்கக் குரல் எழுப்புகிறார்கள். இப்படி இருந்தால் ஆன்டி இன்டியன் என்று தமிழர்களே முத்திரை குத்திவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள்.

தேசியக் கொடி ஏற்றாத கட்சிகள் எல்லாம் இந்தியாவுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்று ஸ்டாலின் மீது மோடி நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சரிதான்.