குவைத்தில் இருந்து திரும்பிய கணவன்! ஆசை ஆசையாக காத்திருந்த இளம் மனைவிக்கு வந்து சேர்ந்த பகீர் தகவல்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் குவைத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ஆந்திர மாநிலம் கடப்பா அரகே ஒபுலவாரி என்ற இடத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர்மோதிக் கொண்டது. இதில் குவைத்தில் பணிபுரியும் புல்லாம்பேட்டை சென்னகாரி பள்ளி கிராமத்தை சேர்ந்த பாப்பையா என்பவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பாப்பையா நேற்று அதிகாலை குவைத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் பின்னர் காரில் தன்னுடைய தாய் சுப்பம்மா மற்றும் மகன் ஹரிச்சரண் உடன் தனது கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன ஓரம் பாடு கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பள்ளம் பேட்டை காவல் நிலைய போலீசார் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். வெளி நாட்டில் வேலைப் பார்த்து வந்த நிலையில், வீட்டுக்கு வரும் முன்னரே சடலமாக இருந்த கணவர் மற்றும் மகனைப் பார்த்து பாப்பையாவின் மனைவி கதறி அழுதார்.