தேர்தல் பணியின் போது கால் உடைந்த தொண்டன்! மருத்துவ செலவை ஏற்ற வேட்பாளர்!

கே வி குப்பம் குடியாத்தம் பகுதியில் இளைஞர்கள் பயன்பெற விளையாட்டுத் திடல் இலவச மருத்துவ முகாம் வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம் உறுதி.


 வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பரப்புரையில் மக்களின் தேவைகளை மக்களிடமே கேட்டு அதை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி வழங்குவது வாக்காளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வெயில் நிறைந்த மாவட்டமாக இருந்தாலும் தேர்தல் ஆனால் ஆனால் அதை அதைவிட அதிகமாகவே வீசுகிறது. கூட்டணி நிர்வாகிகள் தலைவர்கள் என  வேட்பாளர்களை வரவேற்பதும் பொது மக்களிடம் வாக்கு கேட்பதும் கூட்டணித் தலைவர்களின் பரப்புரை என அனைவரும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். 

 ஏ.சி.சண்முகம் பேசும்போது குடியாத்தம் மற்றும் கே வி குப்பம் பகுதியில் விளையாட்டு வீரர்கள் அதிகமாக இருப்பதால் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ஒரு மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். அனைத்து மக்களும் இலவசமாக திருமணம் செய்து கொள்ளும் வகையில் திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும் அவர் கூறும்போது எனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாததாலும் அவருக்கு என்ன உடல் கோளாறு என்பதையும் முழுமையாக கண்டறிய முடியாமல் போனதால் 38 வயதிலேயே அவர் இறந்து போனார்.

அந்த சூழ்நிலை வேறு எந்த தாயாருக்கும் வந்துவிடக் கூடாது. தன்னிடம் வருமானம் இல்லையே என்று மருத்துவ சோதனை செய்து கொள்வதற்கும் மருத்துவம் செய்து கொள்வதற்கும் பெண்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான உடல் பரிசோதனையை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை என்னுடைய மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திலேயே வந்து முகாம் நடத்தி அதன்மூலம் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கான உயர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் என்னுடைய  மருத்துவமனையிலேயே அதை இலவசமாக செய்ய தயாராக இருக்கிறேன். பெங்களூருவில் எனது தாயார் பெயரில்  இயங்கி வரும் அந்த மருத்துவமனையில் சேர்ந்து அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் தன்னுடைய வாக்குறுதியில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது அண்டை நாடுகள் நமது இந்தியாவின் வளர்ச்சியை கண்டு நம்மை எதிரி நாடுகளாக பார்க்கின்றார்கள் நம்மிடம் போர் தொடுக்க முயல்கின்றார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை எல்லாம் எதிர்கொண்டு அவர்களை அடக்கிய நமது பாரத பிரதமர் மோடி மட்டுமே எதிர்காலத்தில் மிகச் சிறந்த பிரதமராக நம்மை காப்பாற்றும் ஒரு சிறந்த பிரதமராக இருப்பார். ஆகவே அவர் மீண்டும் பிரதமராக இரட்டை இலைச் சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள்  என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது பெண்கள் ஏ.சி சண்முகத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பரதராமி அருகே வரதாரெட்டிபள்ளி கிராமத்தில் பரப்புரையின்போது  கால்கட்டுகளுடன் இருவர் சுமந்தபடி வந்த அதிமுக ஊராட்சி செயலாளர் சரவணன் என்பவரை பார்த்து எப்படி அடிப்பட்டது என்று கேட்க  இரட்டை இலை வரைந்து கொண்டிருந்த போது தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாக தெரிவித்தார்.

அனைவரையும் வாழ வைத்து இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருப்பது அம்மா அவர்கள். புரட்சி தலைவர் கண்டெடுத்த சின்னம் இரட்டை இலைசின்னம். அதை வரைந்து கொண்டிருந்த போது இந்த அடிபட்டிருக்கிறது உங்களுக்கான மருத்துவச் செலவு அனைத்தையும் நானே ஏற்கிறேன். என்று அவர் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது..