வேலூரில் ஏ.சி.சண்முகமும், கதிர் ஆனந்தும் நிற்கவே கூடாது, மீண்டும் தேர்தலுக்கு தடை கேட்கும் சீமான்!

வேலூரில் பண நடமாட்டம் இருக்கிறது என்றுதான், அங்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.


துரைமுருகனுக்கு சொந்தமான இடத்திலும், தெரிந்தவர்கள் இடத்திலும் பணம் மாட்டியது, ஏ.சி. சண்முகமும் ஏகமாய் செலவு செய்திருந்ததாக சொல்லப்பட்டது. அதனால், அங்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் அதே இரண்டு பேர் தேர்தலில் நிற்பதற்கு நாம் தமிழர் சீமான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

வேலூரில் பண நடமாட்டம் என்று காரணம் சொல்லித்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. அங்கு பணம் விளையாண்டதற்குக் காரணமாக இருந்த அதே கதிர் ஆனந்தும், ஏ.சி.சண்முகம்தான் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் செய்த தவறு காரணமாகத்தான் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. 

ஆனால், அந்த இரண்டு பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பிடபட்ட பணம் குறித்து சரியான விளக்கமும் கிடைக்கவில்லை. அதனால், ஏற்கெனவே பணம் கொட்டும் அதே இருவரும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், ஏற்கெனவே தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும், அதனால் அங்கு இப்போது தேர்தல் நிறுத்தப்பட வேண்டும்.

பண விவகாரங்களில் சிக்காதவர்களை மட்டுமே வேட்பாளர்களாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நிறுத்த வேண்டும், அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்கும் என்கிறார் சீமான்.

சொல்றது எல்லாம் சரிதான், ஆனா, கேட்குறது யாருப்பு..?