விலை மாது விவகாரம்! கதறி அழுத பெண் வேட்பாளர்! கம்பீருக்கு சிக்கல்!

டெல்லி: கவுதம் காம்பீர் என்னை தரக்குறைவாக விமர்சித்து நோட்டீஸ் விநியோகித்து வருகிறார், என்று ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக.,வில் கடந்த மாதம் இணைந்தார். இந்நிலையில், அவருக்கு, டெல்லி கிழக்கு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அக்கட்சி சீட் வழங்கியுள்ளது. இவரை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பாக, அதிஷி களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்று வந்தது. இதன்படி, திடீரென நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, என்னைப் பற்றி கவுதம் காம்பீர் மிகவும் தரக்குறைவாக, ஆபாசமான நோட்டீஸ்களை விநியோகித்து வருகிறார், என கண்ணீர் மல்க புகார் எழுப்பினார். 

இதன்பேரில், உடனே, ஆம் ஆத்மியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், #IStandWithAtishi என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஸ்டேக் ஏற்படுத்தி, பதிவுகளை வெளியிட, அது ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.  இதற்கு கவுதம் காம்பீர் உடனடியாக, பதில் அளித்துள்ளார். ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுது, அதன் மூலமாக, பொதுமக்களின் பரிதாபத்தை சம்பாதித்து, வெற்றி பெற, ஆம் ஆத்மி சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் பின்னால் ஒளிந்துகொண்டு, அழுகுணி அரசியல் செய்வதை முதலில் கைவிட்டு,  தைரியமாக களத்தில் இறங்கி அரசியல் செய்ய வரும்படி, கவுதம் காம்பீர் அழைப்பு விடுத்துள்ளார்.  இதுதவிர, தனது மீதான புகாருக்கு உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ள அவர், அவ்வாறு உரிய ஆதாரம் ஒன்றை சமர்ப்பித்தால்கூட, இப்போதே போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.