ரவுடி அய்யர் அஇஅதிமுக பிரமுகரின் மிரட்டல் காரணமாக, இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வீடு புகுந்து மிரட்டிய ரவுடி அய்யர்! பயத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரின் மகள் கல்பனாவும், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் ஸ்ரீகரனும் காதலித்துவந்தனர். இதற்கு ஸ்ரீகரனின் பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. காரணம், இருவரும் வெவ்வேறு சாதியினர்.
இந்தநிலையில்தான் ஸ்ரீகரனின் குடும்பத்தினர், கல்பனாவின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பிக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதாவது ஸ்ரீகரன் வீட்டினர் சார்பாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கொலைசெய்யப்பட்ட மேலாளர் சங்கரராமனின் மருமகனும் அ.தி.மு.க பிரமுகருமான கண்ணன் என்பவர் இளம்பெண் கல்பனாவின் வீட்டிற்கே சென்று மிரட்டியுள்ளார்.
இதில், விரக்தியடைந்த கல்பனா, தற்கொலை செய்துகொண்டார். சங்கரராமன் கொலை வழக்கில் உள்ள சிக்கல்களே தீராத நிலையில், சங்கரராமனின் மருமகன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.