நடுரோட்டில் மறித்து பாலியல் சீண்டல்! இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

ரவுடிகள் பாலியல் தொல்லை கொடுத்ததால், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள நலசோபரா கிழக்குப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த பிப்ரவரி 26ம் தேதியன்று காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, சில ரவுடிகள் வழிமறித்து, அவரை பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

இதில், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும், உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்டு, உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

29 வயதான அந்த பெண், தனது தற்கொலை பற்றி 2 பக்க கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். ஆனால், போலீசார் விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதாக, அவரது உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ரவுடிகள் தன்னிடம் வரம்பு மீறுவதாகவும் ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பெண் தற்கொலை வரை சென்றதால் போலீசார் வேறு வழியில்லாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கும் ரவுடிகளுக்கும் என்ன பிரச்சனை என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் கைதுநடவடிக்கை இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.