காதலர் தின ஸ்பெசல்! மேடையில் ராகுல் காந்திக்கு முரட்டு முத்தம் கொடுத்த பெண்!

காதலர் தினமான இன்று விழா ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் மேடையில் ஏறி கன்னத்தில் பஜக் என்று ஒரு முத்தம் கொடுத்தார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வல்சாட் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

ராகுல் காந்தியை வரவேற்று காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு அணியினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மகளிர் அணியை சேர்ந்த பலர் ஒரே நேரத்தில் மேடை ஏறி ராகுல் காந்திக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது பெண் ஒருவர் திடீரென ராகுல் காந்தியை பிடித்து இழுத்து கன்னத்தில் பஜக் என்று ஒரு முத்தத்தை கொடுத்தார். இதனால் மேடையில் இருந்தவர்கள் சற்று அதிர்ச்சியாகினர். ஆனால் முத்தம் கொடுத்த பெண் 60 வயது மூதாட்டி.

எனவே அந்த முத்தத்தை புன்முறுவலுடன் ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார். இருந்தாலும் காதலர் தினத்தன்று பெண் ஒருவர் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்துவிட்டதாக தகவல் பரவியது. இதனை அடுத்து அந்த பெண் யார் என விசாரிக்கப்பட்டது.

அப்போது ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் 60 வயதான காஷ்மிரா பென் என்பது தெரியவந்தது. அவரிடம் ராகுலுக்கு முத்தம் கொடுத்த அனுபவம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தான் 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக காஷ்மிர பென் கூறினார்.

இன்று காதலர் தினம் என்பதால் ராலுக்கு முத்தம் கொடுத்தீர்களா? என செய்தியாளர்கள் வினவினர். இதனால் கோபம் அடைந்த காஷ்மிரா பென், ராகுல் தனக்கு சகோதரர் போன்றவர் என்றார்.

இதனால் இந்த சர்ச்சை அத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனால் ராகுலுக்கும் அந்த பெண்மணி கொடுத்த முத்தம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.