இரவு 9.15 மணி! கொலையாளியை செல்போனில் கால் செய்து அழைத்த பிரியங்கா! போலீசார் வெளியிட்ட திடுக் தகவல்!

கற்பழித்து கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கொலையாளிக்கு பிரியங்கா செல்போனில் கால் செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாலை 6 மணி அளவில் பிரியங்கா தனது டூ வீலரை டோல் கேட் அருகே நிறுத்தும் போதே முக்கிய குற்றவாளி முகமது ஆரிப் உள்ளிட்ட 4 பேர் நோட்டமிட்டனர். அப்போதே பிரியங்காவை கற்பழிக்க முடிவு செய்த அவர்கள் நான்கு பேரும் போதை தலைக்கேறும் வகையில் விஸ்கி அருந்தியுள்ளனர்.

பிறகு நவீன் எனும் க்ளினரை அனுப்பி அந்த டூ வீலரை பஞ்சராக்கியுள்ளான் ஆரிப். சரியாக ஒன்பது மணி அளவில் பிரியங்கா ரெட்டி அங்கு வந்ததும் டயர் பஞ்சராகியுள்ளதை பார்த்துள்ளார். அப்போது அருகே சென்ற ஆரிப், தான் உதவுவதாக கூறியுள்ளான்.

ஆனால் தயங்கிய பிரியங்காவிடம் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளான். அதன் பிறகே பிரியங்கா தனது டூ வீலரை அவர்களிடம் கொடுக்க, சிவா அங்கிருந்து அதனை எடுத்துச் சென்றுள்ளான்.

நீண்ட நேரமாகியும் சிவா வராத நிலையில் பிரியங்கா தனது செல்போனில் இருந்து ஆரிப்பை அழைத்துள்ளார். அப்போது தான் சென்ன கேசவன் மற்றும் நவீனுடன் அங்கு சென்று ஆரிப் பிரியங்காவை தாக்கி அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் பக்கம் அழைத்துச் சென்றுள்ளான்.

பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அந்த அழைப்பு தான் ஆரிப்பை போலீசுக்கு அடையாளம் காட்ட உதவியது. மேலும் டூ வீலரை ஆரிப் கொண்டு வராத நிலையில், அவனுக்கு பிரியங்கா செல்போனில் அழைத்த அழைப்பு தான் குற்றவாளிகள் சிக்கவும் காரணமாகியுள்ளது.