17 வயது சிறுமியை திருமணம் செய்து ஓராண்டாக செக்ஸ் டார்ச்சர்! 36 வயது நபர் வெறிச் செயல்!

சிறுமியை கட்டாயத் திருமணம் செய்து ஓராண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.


பல்கர் மாவட்டத்தில் உள்ல விரார் என்ற இடத்தைச் சேர்ந்தவர்  36 வயது அஜய் சிங். இந்த நபர் தனது உறவுக் காரச் சிறுமியான 17 வயதுப் பெண்ணை விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து விராரில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக 2017-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரை பலமுறை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அந்த நபரின் நடவடிக்கைகளுக்கு மறுப்புத் தெரிவித்த சிறுமியை அந்த நபர் மீண்டும் மீண்டும் தாக்கியதாகவும், அந்தச் சிறுமி தனது பெற்றோரை சந்தித்துவிடாமல் அஜய் சிங் பார்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நபரின் கொடுமைகள் தாங்க முடியாத அளவுக்கு எல்லை மீறிய நிலையில் அங்கிருந்து தப்பிய சிறுமி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டார்.

தினமும் கணவன் செய்யும் செக்ஸ் டார்ச்சர்கள் எல்லை மீறியதாக அந்த சிறுமி காவல்துறையிடம் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மனைவி என்றும் பாராமல் தன்னை கொடூரமாக கற்பழித்ததாகவும் அந்த நபர் மீது சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்தச் சிறுமியின் தனது புகாரில் தனக்கு நேர்ந்த அனைத்தையும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். சிறுமியின் புகாரின் பேரில் கடந்த புதன் கிழமை காவல்துறையினர் அஜய் சிங்கை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம், கட்டாயத் திருமணத்துக்காக கடத்துதல், காயம் ஏற்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அஜய் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.