உங்களுக்கு கிடைத்தது கருங்கல் அல்ல ரத்தினக் கல்..! ஓவர் நைட்டில் 25 கோடி ரூபாய்க்கு அதிபதியான ஏழைத் தொழிலாளி..! எப்படி தெரியுமா?

தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டருகே குழி தோண்டும்போது ரூ.25 கோடி மதிப்புள்ள ரத்தின கற்கள் கிடைத்த அதிர்ச்சி சந்தோஷ நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதையடுத்து அவர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.


ஆப்பிரிக்க கண்டத்தில் ஏழ்மையான நாடுகளில் தான்சானியாவும் ஒன்று. இங்கு சுமார் 6.2 கோடி மக்கள் உள்ளனர். இங்கு சுரங்கங்களில் ரத்தினம், தங்கம், வைரம் கிடைப்பது வழக்கமான ஒன்று. இந்நாட்டில் மறைமுகமாக பலவழிகளில் விலை உயர்ந்த பொருள்கள் கடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பின்புறங்களில் பள்ளம் தோண்டி தங்கம், ரத்தினம் போன்ற பொருள்கள் கிடைத்தால் அதை அரசிடம் ஒப்படைத்து சன்மானம் பெறுவது வழக்கம். இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் 52 வயதான சன்னியூ லைசார். 

தன் வீட்டின் பின்புறம் பல நாள்களாக குழி தோண்டிக்கொண்டிருந்த லைசாருக்கு விலை உயர்ந்த தான்சானைட் எனப்படும் இரண்டு கற்கள் கிடைத்தன. அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 25 கோடி மதிப்புள்ள ரத்தினக் கற்கள். கருநீல நிறம் கற்களின் எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும், மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும். இது ஆபரணங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. லைசாரிடமிருந்து இரண்டு ரத்தினக்கல்லையும் பெற்றுக்கொண்ட அரசு, ரூபாய் 25 கோடி வழங்கி உள்ளது. இதை அடுத்து ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. 

லைசாருக்கு 4 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 2000 மாடுகள் உள்ளது என்பது மற்றொரு கதை. இந்த பணத்தில் குடும்பத்தை கவனிக்கவும், வணிக வளாகம், பள்ளி திறக்க திட்டமிட்டுள்ளார்.