அடக்கடவுளே!பிறந்த நாள் பரிசாக தோழியை காதலனுக்கு விருந்தாக்கிய காதலி! பிறகு நேர்ந்த விபரீதம்!

தனது பிறந்த நாள் பரிசாக தனது தோழியை தனது காதலனுக்கு பெண் ஒருவர் விருந்தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாலிவ் என்ற இடம் மும்பை அருகே உள்ளது. இந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பெண் மும்பையின் கந்திவாலி என்ற இடத்தைச் சேர்ந்த தன் தோழியை தன் பிறந்த நாள் விருந்துக்கு அழைத்தாள்.

 

தோழிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அந்தப் பெண்ணின் வஞ்சக எண்ணம். தனது தோழி நட்புடனும், பாசத்துடனும் தான் விருந்துக்கு அழைப்பதாக எண்ணிக் கொண்டு விருந்துக்கு வந்தாள்.

 

விருந்துக்கு அழைத்த பெண்ணின் காதலனும் வந்திருந்தான். மூவரும் 20களின் மத்திய வயதில் உள்ளவர்கள். விருந்து நிகழ்ச்சி இயல்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில் முன்பே திட்டமிட்டபடி விருந்துக்கு அழைத்த பெண்ணும், அவளது நண்பனும் தங்கள் கீழ்த்தரமான திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கினர்.

 

விருந்துக்கு வந்த பெண்ணின் குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்த அவர்கள் அந்தப் பெண்ணுக்கு கொடுத்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் கிறக்க நிலைக்குச் சென்றார்

 

இருந்தாலும் சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்த அந்தப் பெண்ணை தோழி கெட்டியாகப் பிடித்துக் கொள்ள நண்பன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் வேலை முடிந்ததும் இருவரும் அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கினர்.

 

நடந்தது குறித்து பெற்றோரிடமோ, வேறுயாரிடமும் தெரிவிக்கக்  கூடாது என மிரட்டியதாகக் கூறப்படுகிறதுஇந்நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண் வாலிவ் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்தது குறித்து புகார் அளித்தார்.

 

அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விருந்துக்கு அழைத்த பெண்ணையும் அவளது நண்பனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்அப்போது தனது காதலனுக்குவித்தியாசமான பிறந்த நாள் பரிசு கொடுக்க முடிவு செய்ததாக கூறி அந்த பெண் திடுக்கிட வைத்தாள்.

 

தனது காதலனுக்கு எப்போதுமே தனது தோழி மீது ஒரு கண் இருப்பது தெரியும் என்பதால் அவனது ஆசையை நிறைவேற்ற இப்படி நடந்து கொண்டதாக கூறி அதிர வைத்துள்ளார் அந்த இளம் பெண். தற்போது காதலனும், காதலியும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.