நடிகர் சூரிக்கு வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து! நெகிழவைக்கும் பதிவு!

டெல்டா மாவட்டத்தை புயல் புரட்டிப்போட்ட நேரத்தில் ஒருசில கலைஞர்கள்தான் உணர்வுபூர்வமாக களம் இறங்கினார்கள்.


அந்த வகையில் நடிகர் சூரியும் பணம் கொடுத்தது மட்டுமின்றி களத்தில் இறங்கி பணியாற்றினார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அந்த ஊர் மக்கள் கொடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி இது.

தம்பி சூரி.. இன்னிக்கு உனக்கு பொறந்த நாளாமே. இப்பதான் நம்ம ஊரு பசங்க சொன்னாங்க. நல்லா இருக்கியாப்பாஞ் பொறந்த நாளுக்கு புள்ள குட்டிகளோட கோயிலுக்குப் போனியா? உம் மனசுக்கு நீ நல்லா இருப்பே.

 புயல்ல வீடு வாசல எழந்து நாங்க நடுரோட்டுல நின்னப்ப, எங்கள தேடிவந்த புள்ள நீ. மத்தவுக மாரி நீயும் நிவாரணத்த கொடுத்துட்டு நாலு வார்த்த பேசிட்டு கௌம்பி இருக்கலாம்.

ஆனா, எங்க செருவாவிடுதியிலேயே தங்கி, நாங்க படுத்திருந்த அரசாங்க பள்ளிக்கொடத்துலேயே கொசுக்கடியிலயும் குளிர்லயும் தூங்கி, எங்க ஊரு கொளத்துலேயே குளிச்சு எங்க ஊரு ஆளாவே மாறி நின்ன நீ. எங்க ஊருக்கே அதுல ரொம்ப பெருமை.

வீடு போச்சேன்னு நா அழுதப்ப என்னய கட்டிப் புடிச்சு நீ ஆறுதல் சொன்னேஞ் பெத்த புள்ள கூட செய்யாத பெரிய ஒதவி அது. எம்பேரங்கிட்ட பேச செல்லுபோனு கேட்டேன். மறுநாளே ஒரு தம்பி மூலமா கொடுத்து அனுப்பிவிட்ட.

எம்புருசன் கோயில் பூசாரி. நாங்க நெதமும் சாமி கும்புடுறப்ப ஓம்பேரச் சொல்லாம இருந்தது இல்ல. டி.வி.யில ஓம்படம் வந்தா அப்பெல்லாம் நடிகர் சூரின்னு சொல்லுவோம். இப்பெல்லாம் எங்க புள்ள சூரின்னு சொல்றோம். நீ பல நூறு வருசம் நல்லா இருக்கனும். 

நேரங் கெடைக்கிறப்ப எங்க ஊரு பக்கம் வந்து மறுபடியும் எங்கள ஒரு எட்டு பாத்துட்டு போ. நம்ம சரவணன் தம்பிகிட்ட இது சம்பந்தமா சொன்னேன். நா படம் எடுக்குறப்ப அழைச்சிட்டு வரேன்னு சொன்னாப்புலஞ் வருசக்கணக்குல இப்புடி சொல்லிக்கிட்டேதான் இருக்காப்புலேயே தவிர, அவர் படம் எடுத்த மாதிரியும் தெரியல,

நீ இந்தப்பக்கம் வந்த மாதிரியும் தெரியலை. எப்புடி எவ்வளவு வேலை இருந்தாலும் ஓஞ்சொந்தக்காரங்களை நேரம் ஒதுக்கி பாப்பியோ, அந்த மாதிரி எங்க ஊரு முழுக்க ஓஞ்சொந்தம்னு நெனச்சு எங்களுக்கும் நேரம் ஒதுக்குஞ் ஒனக்கு எங்களோட பொறந்த நாளு வணக்கம்.

நெகிழ வைக்கும் பதிவுதான்.