17 வயது தான் ஆகிறது! காதலனை திருமணம் செய்த சினிமா பிரபலத்தின் தங்கை!

ஜெய்ன் மாலிக்கின் சகோதரி சஃபா தனது 17 வது பிறந்தநாளுக்குப் பிறகு தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


பிரபல பாடகரான ஜெய்ன் மாலிக்கின் சகோதரி சஃபா தனது 17 வது பிறந்தநாளை கடந்த வாரம் கொண்டாடினார். தற்போது இவர் புதன்கிழமை அன்று தன் காதலர் மார்ட்டின் டைசர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் உள்ள அவர்களது இல்லத்தில் சஃபா மாலிக்கின் திருமணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. தம்பதியினர் பாரம்பரிய விழாவின் படி இருவரும் நிக்கா செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சஃபா மாலிக்  தாயார், திரிஷா மாலிக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தார். மேலும் அந்த புகைப்படங்களுக்கு கேப்சனாக , "என் மகளின் மிகப்பெரிய நாள் இன்று" என பதிவு செய்திருந்தார். 

வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட சகோதரியின் திருமண விழாவில் ஜெய்ன் மாலிக கலந்து கொள்ளாதது பலரிடத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. தொழில் நிமித்தமாக அமெரிக்காவில் வசித்து வருகையில், அவர் அடிக்கடி பிராட்போர்டில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திக்கிறார். 

சஃபா இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்துகொள்வதற்கான காரணம் என்ன ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் ." மேலும் கடந்த வாரம் தான் உங்களுடைய 17வது பிறந்தநாளை கொண்டாடி நீங்கள் இந்த வாரம் நீங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் " என்று ஆச்சரியத்திலும் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் நெட்டிசன்கள் பலரும் சஃபாவிற்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்தும் வருகின்றனர்.