தோனி, கோஹ்லியை விட அதிக ஆதரவு தந்தது சௌரவ் கங்குலி தான்! யுவராஜ் சிங் அதிரடி கருத்து!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் யார் தனக்கு அதிகமாக ஆதரவு அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.


இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களின் தலைசிறந்த வீரர் என்று நினைத்து பார்த்தால் நம் மனதில் நிச்சயம் தோன்றுபவர் யுவராஜ் சிங். இவர் கங்குலி ,தோனி, கோஹ்லி ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ளார். இந்திய அணி மோசமாக இருந்த நிலையில் சௌரவ் கங்குலி கேப்டன் ஆனவுடன் திறமையான இளம் வீரர்களை தேர்வு செய்து இந்திய அணிக்காக ஆட வைத்தார். 

அப்படி இந்திய அணியில் நுழைந்தவர்கள் தான் ஷேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் மற்றும் பலர். தற்போது யுவராஜ் சிங் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சௌரவ் கங்குலி மற்றும் டோனி ஆகிய இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்று கூறுவது மிக கடினம்.

ஆனால் கங்குலியின் கேப்டன்சியில் ஆடிய ஞாபகங்கள் தான் எனக்கு மிக அதிகம். தோனி , கோலி கேப்டனாக இருக்கும் போது எனக்கு கிடைத்த ஆதரவை விட கங்குலி கேப்டனாக இருக்கும் போது கிடைத்த ஆதரவே எனக்கு அதிகம். தோனியுடன் நெருக்கமாக பழகி வந்தாலும் ஆதரவு அதிகமாக அளித்தது கங்குலி என்று யுவராஜ் சிங் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.