நாமக்கல்லில் பைக் ரேஸ் விபரீதம்..! அசுர வேகம்! வளைவில் வந்த செங்கல் லாரி! நொடியில் பறிபோன 2 உயிர்கள்!

பைக் ரேசில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் செங்கல் லாரி மீது மோதி உயிரிழந்த சம்பவமானது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசன். இவருக்கு நாமக்கல் மாவட்டத்திலுள்ள சின்னவேப்பநத்தை எனும் பகுதியை சேர்ந்த ரோகித் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உட்பட 10 பேர், 4 இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே கோல்டன் பேலஸ் என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு அருகேயுள்ள வளைவில் நேற்று நள்ளிரவு செங்கல் பாரத்தை சுமந்து கொண்ட லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. 

லாரி வளைவில் திரும்புவதையும் கவனிக்காத இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை கொண்டு அதிவேகமாக மோதியுள்ளனர். மோதிய அதிர்ச்சியில் சம்பவயிடத்திலேயே ஹசன் மற்றும் ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மணி என்ற இளைஞர் படுகாயமடைந்து காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பைக் ரேஸ் சம்பந்தமாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.