டிக்டாக் மோகத்தில் இளைஞர்கள் அந்தரத்தில் குதித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிக்டாக் மோகம்..! தண்ணீருக்கு பதில் தரையில் சம்மர் சாட் டைவ்..! கழுத்து முறிந்து இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்!

சமீபகாலமாக பிரபலம் அடைவதற்காக இளைஞர்கள் பலர் டிக்டாக் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய டிக்டாக் வீடியோக்களால் பல்வேறு சமூக சீர்கேடுகளும் அரங்கேறி வருகின்றன. பெண்கள் அதிகமாக டிக்டாக் வீடியோக்களினால் பாதிப்படைகின்றனர்.
இளைஞர் ஒருவர் சீக்கிரம் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக செய்திருக்கும் செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இளைஞர் ஒரு தள்ளுவண்டியின் மீது ஏறி நிற்கிறார். திடீரென்று சாகச வீரர்கள் செய்யும் "சாமர்சால்ட் பல்டி" அடித்து நடுரோட்டில் விழுகிறார். விழுந்தவுடன் அவருக்கு பேச்சு மூச்சே இல்லை.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.