மான் கறி எனக் கூறி பூனை கறி..! ஆம்பூர் அருகே விற்பனை படு ஜோர்..!

இளைஞரொருவர் பூனைக்கறியை மான்கறி என்று ஏமாற்றி விற்று வந்த சம்பவமானது ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூரிலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டம் திருப்பத்தூர். இந்த மாவட்டத்துக்கு உட்பட்டது ஆம்பூர். இதற்குட்பட்ட பெரியாங்குப்பம் என்று பகுதிக்கு அருகே அமைந்துள்ளது நமாஸ்மேடு. 

இங்கு மணிகண்டன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 20. இவர் சமீபகாலமாக மான்கறி விற்று வந்துள்ளார். மான்கறி விற்பது சட்டவிரோதம் என்பது தெரிந்தும் கூட இவர் தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த செய்தி எப்படியோ அப்பகுதி வனத்துறையினரிடம் சென்றுள்ளது. உடனடியாக அவர்கள் மணிகண்டனை கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், பூனைக்கறியை சமைத்து மான்கறி என்று ஏமாற்றி விற்று வந்துள்ளதாக கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.