கிருத்துவ பாதிரியார் ஒருவர் 240 பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த செய்தியானது பிரேசில் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
240 பெண்கள்! நினைத்த போதெல்லாம் உல்லாசம்! விலங்குகளையும் பயன்படுத்திய கொடுமை! ஒரு நாட்டையே உலுக்கிய தேவலாய சம்பவம்!
உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ பாதிரியார்கள் சிலர் சிறுவர்களையும், பெண்களையும் தங்களுடைய பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமுள்ளன.
பிரேசில் நாட்டில் உள்ள கிருத்துவ இளைஞர்கள் பாதிரியார் குழு தலைவர் ஒருவர் 240 பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த அதிர்ச்சி செய்தி தற்போது வெளியாகியுள்ளது.ஆள் தெரியாத நபர்களிடமும், மிருகங்களிடமும் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டில் மினாஸ் ஜெராய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட முறியே என்னும் நகரில் பிரபலமான கிருத்துவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் இளைஞர்கள் குழு பாதிரியார் தலைவராக ரோனி ஷெல்ப் என்பவர் பணியாற்றி வந்தார். இவருடைய வயது 32. கடந்த 4 ஆண்டுகளாக பிரேசில் நாட்டில் உள்ள 11 மாகாணங்களில் கிட்டத்தட்ட 240 பெண்களை ஆசை வார்த்தை கூறி ரோனி ஏமாற்றியுள்ளார்.
அவர்களிடமிருந்து அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெறுவதற்காக 970 முதல் 2400 டாலர்கள் வரை தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். புகைப்படங்களை பெற்றுக்கொண்ட பணத்தை தராமல் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இவருடைய மிரட்டலில் இருந்து தப்பித்த ஒரு பெண் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து கொண்ட காவல்துறையினர் ரோனியின் செல்போன் பேச்சுக்களை டேப் செய்து வந்துள்ளனர். ஒரு மாத காலத்திற்கு ரோனியை பின்தொடர்ந்த காவல்துறையினர் 11-ஆம் தேதியன்று அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவருடைய செல்போனில் 1,600 இணக்கங்கள் இருந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
மேலும் அவருடைய இருப்பிடத்தில் பல்வேறு பாலியல் கருவிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் கூறிய குற்றச்சாட்டை ஏற்க அவர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.