சொந்த அக்காவிண் கண்களை தோண்டி எடுத்து குருடாக்கிய தம்பி! அதிர வைக்கும் காரணம்!

விலை மலிவாக துணி வாங்கிய காரணத்தினால் அக்காவின் கண்களை தம்பி நோண்டியெடுத்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் துவாரகா என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு 17 வயது இளைஞன் வசித்து வருகிறான். இவனுடைய சகோதரிக்கு 20 வயது. தன்னுடைய தம்பிக்காக அந்த பெண்‌ 100 ரூபாய் மதிப்பில் உடை வாங்கி கொடுத்திருக்கிறார். இதனைக் கண்டு ஆவேசமடைந்த தம்பி அக்காளுடன் தனக்கு மலிவு விலையில் உடை வாங்கியதற்காக கோபித்து கொண்டான்.

ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத  அவன் தன் அக்காளை கொடுமை படுத்தியுள்ளான்.  பின்னர் அவருடைய கண்களை நோண்டி வெளியே எடுத்துள்ளான். வலி தாங்க முடியாத பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்திலிருந்த மகளிர் அவரை காப்பாற்றியுள்ளனர். 

விசாரித்ததில் பெண்ணின் பெற்றோர் பீகார் மாநிலத்திற்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. குடியிருப்புக்குள் நுழைய முயன்ற பொதுமக்களை அந்த சிறுவன் பயங்கரமாக தாக்கினான். ஒருவழியாக அவனுடைய தாக்குதலை உடைக்கு பொதுமக்கள் அறையில் பூட்டப்பட்டிருந்த பெண்ணை காப்பாற்றினர். 

அந்தப்பெண்ணின் முகம் வீங்கி இருந்தது. முகத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தன் அக்காவை பயங்கரமாக தாக்கிய சிறுவன் பஞ்சாயத்துத் தலைவர்களால் தண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.