தாய் மட்டும் அல்ல..தங்கைகளுடனும் இச்சையை தீர்க்க விபரீத உறவு! அலெக்சாண்டரை சம்பவம் செய்த இளைஞர் கூறிய பகீர் காரணம்!

நண்பரின் தாயாருடன் வைத்திருந்த தகாத உறவை நிறுத்தாததால் இளைஞர் ஒருவர் கட்டிட தொழிலாளியை கொலை செய்துள்ள சம்பவமானது கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவில் அருகே கருங்கல் பகுதிக்கு அருகே சகாய நகர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு அலெக்சாண்டர் என்ற 46 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தநாராக பணியாற்றி வந்தவராவார். தற்போது இவர் தாயகம் திரும்பி கருங்கல் பகுதியிலேயே வீட்டு வேலை செய்து வருகிறார். இதனிடையே அலெக்சாண்டர் இருக்கும் அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதனை அறிந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் மகனான ஜவகர் தன் நண்பனான சுனில் என்பவருடன் சேர்ந்து தகாத உறவை கைவிடும்படி அலெக்சாண்டரை கடுமையாக எச்சரித்தனர்.  ஆனாலும் அலெக்ஸாண்டர் அதனை மதிக்காமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் கள்ளக்காதலியின் மகள்களையும் தனது இச்சைக்கு பயன்படுத்த ஆரம்பித்தார் அலெக்சாண்டர்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அலெக்ஸாண்டரை கொலை செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். 27-ஆம் தேதியன்று அலெக்சாண்டர் அப்பகுதிக்கு அருகேயுள்ள புங்கரைகுளங்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சில வாலிபர்கள் வழிமறித்து அவருடைய முகத்தில் மிளகாய் பொடியை வீசியுள்ளனர். அதன் பின்னர் அரிவாளால் அலெக்சாண்டரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

அலெக்சாண்டர் இறந்ததை உறுதி செய்து கொண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். உபயோகப்படுத்திய அரிவாளை அருகில் உள்ள ஆற்றில் வீசியுள்ளனர். காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலையில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கருங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.