வேறு சமுதாய பெண்ணுடன் பழகிய இளைஞன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயர்ஜாதி பெண்ணுடன் உறவு! உயிரோடு எரிக்கப்பட்ட தலித் இளைஞர்! பதற வைக்கும் காரணம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹார்டோய் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அபிஷேக் என்ற 19 வயது இளைஞர் வசித்து வந்தார். இவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அபிஷேக்கின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய சிகிச்சைக்காக உறவினரிடமிருந்து அபிஷேக் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் காதலித்து வந்த பெண் அவரை கால் செய்து அழைத்துள்ளார்.
இதனால் அவரை காண்பதற்கு அபிஷேக் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் உறவினர்கள் அபிஷேக்கை தனியறையில் அடைத்தனர். பின்னர் அந்த அறைக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். உடல் வெந்து போன அபிஷேக்கின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அபிஷேக் உயிரிழந்துவிட்டார். சம்பவம் அறிந்த அபிஷேக்கின் உறவினரான ராஜு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண், அவரது மாமா மற்றும் அத்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.