நண்பனின் மனைவியுடன் தகாத உறவு! பிறகு நிகழ்ந்த கொடூர கொலை! வாட்ஸ்ஆப் வீடியோவால் அம்பலமான அந்தரங்கம்!

இளைஞர் ஒருவர் நண்பரின் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதற்காக நண்பரை கொன்று புதைத்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில் இடுக்கி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ரிஜேஷ் என்ற இளைஞர் வசித்து வந்தார்‌. இவருடைய நண்பரின் பெயர் வசீம். சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிஜேஷ், லிஜி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இதனிடையே வசீமுக்கும், லிஜிக்கும் இடையே நெறுக்கம் வளர்ந்துள்ளது. இந்த நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு உல்லாசமாக சுற்றி திரிந்தனர்.

இதனிடையே இவர்களுடைய கள்ளக்காதல் ரிஜேஷுக்கு தெரியவந்தது. பலமுறை இருவரையும் கண்டித்துள்ளார். உடனடியாக வசீமும், லிஜியும் ரிஜேஷை கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி இருவரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ரிஜேஷை கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், குடியிருப்பின் பகுதிக்கு அருகே சாக்குப்பையில் ரிஜேஷின் உடலில் கட்டிவைத்து தலைமறைவாகிவிட்டனர்.

சில நாட்கள் கழித்து காவல்துறையினருக்கு அந்த சாக்குப்பையை குறித்து தகவல் கிடைத்தது. விரைந்து வந்து  பார்த்ததில் அதனுள் ரிஜேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.

அப்போது ரிஜேஷின் நண்பரான வசீம் மற்றும் அவருடைய மனைவி தலைமறைவாகி இருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக காவல்துறையினர் அவர்களுடைய நண்பர்களையும், வசீமின் சகோதரரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இதனிடையே வசீம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது, "இந்த கொலை வழக்கில் நாங்கள் இருவரும் தான் முக்கிய குற்றவாளி என்றும், தற்போது விசாரணையில் உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் சம்பந்தமில்லை" என்று கூறியுள்ளார்.

தற்போது காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.