இந்து மெடிக்கல் காலேஜ் மாணவியின் உடலில் ஆண் DNA..! மருத்துவ பரிசோதனையில் பகீர் தகவல்!

இறத்துக்கிடந்த பெண்ணின் உடலில் ஆணின் டி.என்.ஏ இறந்துள்ள சம்பவமானது  பரபரப்பை ஏற்படுத்தியது.


பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள மருத்துவ கல்லூரியில் நிமிர்தா சாந்தினி என்ற மாணவி இறுதியாண்டில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதியன்று சொந்த அறையிலே இறந்து கிடந்தார்.

கயிறு இறுக்கப்பட்ட நிலையில் நிமிர்தா இறந்து கிடந்ததை கண்ட அவருடைய தோழிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். உடனடியாக கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நிமிர்தாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதனிடையே, கராச்சியிலுளள் டவ் மருத்துவமனையில் நிமிர்தாவின் சகோதரரான விஷால் பணியாற்றி வருகிறார். நிமிர்தாவின் உடலில் ஏற்பட்ட காயங்களை பார்த்து நிச்சயமாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி விரிவான விசாரணையை தொடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்‌. விரிவான விசாரணையில், இந்த வழக்கில் திருப்புமுனை ஏற்பட்டது. அதாவது இறந்த பெண்ணின் உடலில் ஒரு ஆண்மகனின் டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. 

நிமிர்தாவின் வகுப்புத் தோழர்கள் 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களுள்  மெஹ்ரான் ஆப்ரோ மற்றும் அலி ஷான் மேமன் ஆகியோர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது.

அவர்களுடைய செல்போன் உரையாடல்களை ஆராய்ந்து அலசிய போது ஆப்ரோ மற்றும் நிமிர்தாவுக்கு காதல் ஏற்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு ஆப்ரோ மறுத்துவிட்டார். அவர்கள் பரிமாறிக்கொண்ட 40 குறுஞ்செய்திகள் டெலிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.