கல்லட்டி அருவி பயங்கரம்! பாறைகளுக்கு இடையேசிக்கியிருந்த நண்பர்கள் 2 பேரின் சடலங்கள்..! 3 நாட்களுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்ட பரிதாபம்!

ஊட்டி அருகிலுள்ள கல்லட்டி அருவியில் தவறி விழுந்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் மூன்றாவது நாளான இன்று தீவிர தேடுதலுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் கல்லட்டி என்ற அருவி உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மசினகுடி மலைப் இந்த அருவிக்கு சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும் தலைகுந்தா பகுதியிலிருந்து வரும் ஓடைகள் அனைத்தும் இணைந்து செல்வதால் இந்த அருவியில் பொதுவாகவே தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீர்வரத்து அதிகமாக இருப்பதால் இங்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை இங்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதேப்போல் இந்த இடத்தில் மிகப்பெரிய ராட்சத பாறைகளும் உள்ளன . 

இந்த பாறைகளை பார்ப்பதற்கு பெரிய ஆபத்தான பாறைகள் போல் காட்சி அளிக்கின்றது. இன்னிலையில் ஊட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த இடத்திற்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அப்போது 23 வயதாகும் சாமுவேல் என்ற இளைஞர் பெரிய ராட்சத பாறைகள் இருக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார்.

எதிர்பாராதவிதமாக பாறையில் இருந்த பாசி காரணமாக கால் வழுக்கி கீழே விழுந்து சேற்றில் சிக்கிக் கொண்டார் . பின்னர் வேகமாக வந்த நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரை பார்த்த கணேஷ் என்ற நண்பர் சாமுவேலை காப்பாற்றுவதற்காக நீரில் இறங்கியிருக்கிறார் . இருவருக்குமே நீச்சல் தெரியாத காரணத்தினால் ஒருவரை ஒருவர் காப்பாற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆர்ப்பரித்து வரும் நீரில் இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.

இதனைப் பார்த்த உடன் வந்த மற்ற நண்பர்கள் பதறியடித்துக்கொண்டு செய்வதறியாது அருகில் இருந்த வனத்துறையினரிடமும் போலீசாரிடமும் தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 இருப்பினும் இருவரையும் காப்பாற்ற இயலவில்லை. பின்னர் அவர்களுடைய உடல்களை கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர் . பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் இந்த மீட்பு நடவடிக்கையில் கடந்த இரண்டு நாட்களாகவே ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்றைய தினம் காலை இருவரது உடலும் சுமார் 11 மணி அளவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ராட்சத பாறைகள் நடுவே இவர்கள் இருவரது உடலும் தனித்தனியே சிக்கிக் கொண்டு இருந்ததை மீட்புக்குழுவினர் கண்டறிந்து மீட்டெடுத்தனர். பின்னர் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அவர்கள் இருவரது உடலும் அனுப்பி வைக்கப்பட்டது.