மூவாயிரம் செலவழிச்சிருக்கேன்..! அவள்ட்ட இருந்து வாங்கி கொடுங்க! காவல் நிலையத்தில் கையை அறுத்த காதலன்! மதுரவாயல் சம்பவம்!

சென்னைக்கு அருகில் மதுரவாயில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வசித்து வருபவர் விக்கி என்னும் கீரிப்பிள்ளை ஆவார்.


விக்கி என்ற கீரிப்பிள்ளை கடந்த சில நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலித்த போது அந்தப் பெண்ணுக்காக தன்னுடைய பணத்தையும் செலவு செய்துள்ளார். இதுவரை காதல் செய்து வந்த அந்த பெண் , திடீரென்று தான் காதலிக்கவில்லை என்று கூறியதால் பெரிதும் மன விரக்தி அடைந்த விக்கி போலீசிடம் சென்று புகார் அளித்துள்ளார். 

அந்தப் பெண் விக்கியை காதலிக்கவில்லை என்று கூறியதும் மன விரக்தியில் சுற்றித்திரிந்த அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் சென்று தான் காதலித்த போது அந்தப் பெண்ணுக்காக செலவு செய்த 3,000 ரூபாயை திரும்ப பெற்றுத் தருமாறு கூறியுள்ளார். இந்த புகாரை அளித்தபோது விக்கி மதுபோதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கி மதுபோதையில் இருந்ததன் காரணமாக போலீசார் இந்த வழக்கை அலட்சியப்படுத்திபடுத்தியுள்ளனர். இதனை அறிந்த விக்கி உடனே அங்கிருந்து சாலையில் எதிரே வரும் வாகனத்தின் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இது மட்டுமல்லாமல் தன்னுடைய சட்டை பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடை பயன்படுத்தி தன்னுடைய கைகளில் சர சரவென்று வெட்டி கொண்டு உள்ளார்.

இதனால் ரத்தம் அடங்காமல் வந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் விக்கியை காப்பாற்றி அவரை மதுரவாயல் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். உடனே போலீசார் விக்கியை கை பற்றி அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் .

இருப்பினும் விக்கி மதுபோதையில் இருந்தமையால் அவர்களுடைய சமாதானத்திற்கு இடம் தரவில்லை. ஆகையால் போதை தெளிந்ததும் விக்கி இடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மதுரவாயில் போலீசார் தெரிவித்துள்ளனர்.