போர்வெல் குழிக்குள் விழுந்த ஆடு! உயிரை பணயம் வைத்து நொடியில் மீட்ட இளைஞன்! நெகிழ வைத்த செயல்!

இளைஞரொருவர் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய ஆட்டுக்குட்டியை தன் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்ட சம்பவம் வைரலாக பரவுகிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறைக்கு அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாம் அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை உண்டாக்கியது. இந்த சிறுவனைப் போல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு ஆட்டுக்குட்டியை இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உயிருடன் மீட்டு எடுத்த வீடியோ பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

நான்கு பேர் கொண்ட அந்த குழுவில் இளைஞர் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவதற்காக தன் உயிரை பணயம் வைத்து உடலை தலைகீழாக வைத்துக்கொண்டு ஆழ்துளை கிணற்றுக்குள் நுழைகிறார். மேலே இருந்த மற்ற மூன்று இளைஞர்கள் அவரது காலை மிகவும் பத்திரமாக பிடித்துக் கொள்கின்றனர். நிலையில் இளைஞர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உணவு உடலை உள்ளே செலுத்துகிறார் . இறுதியில் முக்கால்வாசி உடலை ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ளே புகுத்தி கிணற்றில் சிக்கிக் கொண்டிருந்த அந்த ஆட்டுக்குட்டியை ஒரு சில வினாடிகளில் பத்திரமாக மீட்டெடுத்து வருகிறார். 

இந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 45 K பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞர்களை பாராட்டிய வண்ணம் உள்ளனர்.