அசுர வேகத்தில் ரயில்! தொங்கிய படி டிக் டாக் வீடியோ! நொடியில் நேர்ந்த பகீர் சம்பவம்! அதிர்ச்சி வீடியோ!

ரயிலில் உள்ள படியில் தொங்கியவாறு டிக்டாக் செய்த வாலிபர் நூலிழையில் உயிர் தப்பிய போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சமீபகாலமாகவே சிறியவர் முதல் பெரியவர் வரை டிக்டாக் செயலிக்கு அடிமையாகியுள்ளனர். அதிலும் ஒரு சிலர் இந்த செயலியில் மிகவும் ஆபத்தான விஷயங்களைத் கூட செய்வதை தங்களுடைய வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் செய்துள்ள செயலானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது இளைஞர் ஒருவர் ரயிலில் படிக்கட்டில் பயணித்து வந்துள்ளார். அப்போது அவர் டிக்டாக் செய்ய ஆரம்பித்திருக்கிறார். முதலில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் அந்த இளைஞர் ரயில் படிக்கட்டில் நின்று கொண்டு டிக்டாக் செய்திருக்கிறார்.

அவர் செய்த பொழுது கைதவறி வண்டியின் கீழ் சிக்கிக்கொள்ள இருந்தார் . ஆனால் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் அந்த இளைஞன் தப்பி இருக்கிறார் . இந்த சம்பவத்தை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அந்த இளைஞருக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது இம்மாதிரியான சாகசங்களில் ஈடுபடுவது வீரம் கிடையாது முட்டாள்தனம் என கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.