மணிக்கு 120கிமீ வேகத்தில் பறந்த கார்! பானட் மீது திடீரென பாய்ந்த இளைஞன்! பிறகு அரங்கேறிய விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

வேகமாக வந்த காரிலிருந்து தப்பிப்பதற்காக கார் பானட் மீது இளைஞர் பாய்ந்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் எட்டபள்ளி  தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே சர்வீஸ் சாலை என்ற சாலையில் நிஷாந்த் என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மிகவும் அதி வேகத்தில் கார் ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. 

காரின் வேகத்தை கண்டு ஸ்தம்பித்த நிஷாந்த் செய்வதறியாது திகைத்தார். தன் மீது கார் மோதாமல் இருப்பதற்காக காரின் முன்பகுதியில் தாவி குதித்தார். சுமார் 400 மீட்டருக்கு காரின் பேனட் மீது படுத்து கொண்டு சென்றுள்ளார். 

பின்னர் காரை ஓட்டியவர் பிரேக் அடித்துள்ளார். அப்போது நிஷாந்த் சற்று தூரம் பறந்து சென்று கீழே விழுந்தார். விழுந்த அதிர்ச்சியில் அவரது வலது காலில் 3 முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தினை அறிந்த காவல்துறையினர் நெடுஞ்சாலைக்கு விரைந்து வந்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். அப்போது வாகனத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். காரின் எண் மூலம் காரின் சொந்தக்காரரை கண்டுபிடித்தனர். 

அப்போது காரை ஓட்டியவரின் பெயர் நாகாஸ் என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார் என்பதனையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். காவல்துறையினர் நாகாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது எடப்பள்ளி நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.