நண்பர்கள் ஓரினச்சேர்க்கை உறவுக்கு அழைத்த போது மறுப்பு தெரிவித்ததால் இளைஞர் ஒருவரை நண்பர்கள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓரினச்சேர்க்கை ஆசைக்கு இணங்க மறுத்த நண்பன்! சக நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம்! வேலூர் விபரீதம்!

வேலூரில் ஆனந்த் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 30. இவருக்கு பாலாஜி மற்றும் கார்த்திக் ஆகியோருடன் வாட்ஸ்அப் குரூப்பின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், கார்த்திக் மற்றும் பாலாஜி ஆனந்தை வேலூருக்கு அழைத்துள்ளனர்.
மே மாதம் 13-ஆம் தேதியன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளிக்கு ஆனந்தை வரவழைத்தனர். நண்பர்கள் தானே அழைக்கின்றனர் என்பதால் ஆனந்தம் வேலூருக்கு சென்றார். ஆனால் கார்த்திக், பாலாஜி ஆனந்தை தன்பாலின உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ஆனந்த் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த இருவர் ஆனந்தை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.
விசாரணை நடத்திய அப்பகுதி காவல்துறையினர் முதலில் இதனை தற்கொலை வழக்காக கையாண்டனர். ஆனந்தின் செல்போனை சோதித்து பார்த்ததில் இறுதியாக அவர் கார்த்திக் மற்றும் பாலாஜியிடம் அதிக முறை பேசியிருந்தார். காவல்துறையினர் சந்தேகித்து இருவரிடமும் விசாரித்தனர். விசாரணையை தாக்குப்பிடிக்க இயலாமல் கார்த்திக் மற்றும் பாலாஜி தாங்கள் தான் ஆனந்தை கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.