ஜவுளிக்கடையில் டிப் டாப் இளம் பெண் செய்த மோசமான செயல்! சிசிடிவி கேமராவால் சிக்கிய பரிதாபம்!

துணிக்கடையில் வாடிக்கையாளர் ஒருவரின் செல்போனை இளம்பெண் திருடியுள்ள சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரியில் கே தியேட்டர் அமைந்துள்ளது. தியேட்டர் அமைந்துள்ள சாலை கே தியேட்டர் சாலை என்றே அழைக்கப்படுகிறது. இந்த சாலையில் ஒரு பிரபலமான துணிக்கடை உள்ளது. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

புத்தாடைகளை வாங்குவதற்காக இவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 20,000 ரூபாய் மதிப்பிலான செல்போனை காணாமல் தவித்தார். கடை முழுவதும் தேடியதில் அவருடைய செல்போன் கிடைக்கவில்லை.

விரக்தியில் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணித்தனர்.

அப்போது ஸ்ரீனிவாசனின் அருகில் நின்று கொண்டிருந்த இளம்பெண் அவருடைய பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடியுள்ளது தெரியவந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை உபயோகித்து செல்போன் திருடிய இளம்பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.