இளம்பெண் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவமானது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையில் எம்எம்! மார்பில் ஆடம்ஸ்! பச்சை குத்திய நிலையில் சடலமாக கிடந்த புதுப்பெண்! திருப்பூர் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் திருப்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திருமங்கை. திருமங்கையின் வயது 33. எதிர்பாராவிதமாக திருமங்கை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கவுண்டப்புதூர் கிராமத்து அமராவதி ஆற்றங்கரையில் கொல்லப்பட்டு பிணமாக வீசப்பட்டிருந்தார்.
உடனடியாக பொதுமக்கள் அப்பகுதியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திருமங்கையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய மார்பில் ஆடம்ஸ் என்றும் கையில் எம்எம் என்றும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. உடனடியாக ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ரமேஷ் விரைந்து வந்தார். அப்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமங்கை அவருடைய சித்தி மற்றும் சித்தி மகளுடன் கோவிலுக்கு சென்றிருந்ததாகவும், அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளதாகும் கூறப்படுகிறது.
காவல்துறையினர் திருமங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமங்கை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.