உனக்கு உயர் ஜாதி பெண் கேட்குதா? தாழ்த்தப்பட்ட இளைஞன் வாயில் சிறுநீர் கழித்த பயங்கரம்!

பெண்ணை காதலித்த விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை சேர்ந்த ஒரு இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் வாயில் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தில் உள்ள பங்கிடா கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தாக கூறப்படும் ரஞ்சன் தாஸ் அதே பகுதியில் வசித்து வரும் உயர் ஜாதிப் பெண்ணை காதலித்து வந்தார்.

இந்நிலையில் சௌமியா ரஞ்சன் தாஸ் தனது காதலியைப் பார்க்க சென்றிருந்த போது அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் கட்டியா பல்டா சிங் ஆகிய இருவர் ரஞ்சன் தாஸை வழிமறித்து அவரை தென்னை மரத்தில் கட்டி அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். ரஞ்சன் தாஸை கேவலமான வார்த்தைகளைக் கொண்டு திட்டி அந்த இருவர் மிகவும் கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனால் மிகவும் சோர்வடைந்த ரஞ்சன் தாஸ் குடிப்பதற்கு தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இருவரும் இணைந்து ரஞ்சன் தாஸ் வாயில் தங்களது சிறுநீரை கழித்து உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய இந்த வீடியோ வை கண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த இளைஞரை கொடுமை செய்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.