பற்றி எரிந்த வாகனம்! அடியில் சிக்கிய நாய்க்குட்டி! உயிரை பணயம் வைத்து இளைஞர் செய்த நெகிழ்ச்சி செயல்!

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வாகனத்தின் அடியிலிருந்த நாய்க்குட்டிகளை தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞரின் வீடியோ ஆனது வைரலாக பரவி வருகிறது.


குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்தர் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் யாரும் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் ஜீப் ஒன்றின் அடியில் நாய் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்று அந்த வாகனத்தின் அடியில் பாதுகாப்பாக வசித்து வந்தது .

இந்நிலையில் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாரும் பயன்படுத்தாத நிலையில் இருந்த அந்த வாகனத்தில் யாரோ வீசிய சிகரெட் துண்டின் மூலம் அந்த வாகனத்தில் தீப்பிடித்தது எரிய ஆரம்பித்தது . இதனால் அந்த வாகனத்தின் அடியிலிருந்த நாய்குட்டிகள் சூடு தாங்கமுடியாமல் கதறியது .

இதைக்கண்ட இளைஞர்களில் ஒருவர் வேகமாக ஜீப்புக்கு அடியில் நுழைந்து உயிருக்கு போராடிய நாய்க்குட்டிகளை காப்பாற்றினார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் எரிந்துகொண்டிருந்த ஜீப் அடியில் நுழைந்து அந்த 4 நாய்க்குட்டிகளை காப்பாற்றிய அந்த இளைஞனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.