40 வயசு பெண்கள் தான் நாகர்கோவில் காசிக்கு பிடிக்கும்..! அவர்களை எப்படி கரெக்ட் செய்வான் தெரியுமா? போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!

பல்வேறு பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடிய காமுகன் சிக்கிக்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங்காகி இருப்பவர் காசி.இவர் சமூக வலைத்தளங்களில் பல பெண்களிடம் தன்னை பாடி பில்டர் என்றும், பணக்காரர் என்றும், மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அவர்களை கவரும் வகையில் சமூக வலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களில் செய்து வந்தார்.

தன்னுடன் உல்லாசமாக இருக்க ஒப்புக்கொள்ளும் பெண்களுடன் இருக்கும் தருவாயில், அவர்களுக்கே தெரியாமல் அந்தரங்க காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். எடுத்தது மட்டுமின்றி அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். 

மேலும் தன்னுடன் இணக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளும் பெண்களை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளார். 

இந்நிலையில் இவர் ஒரு மருத்துவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்த மருத்துவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். தன்னுடைய அந்தரங்கம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.தன்னிடமிருந்து 7 லட்ச ரூபாயையும் காசு பறித்துக் கொண்டதாக அந்த மருத்துவர் புகாரளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் காசி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த செய்தியானது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.