வங்காளதேச இளம்பெண் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு வருவதாக வெளியிட்ட வீடியோவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரேப் பண்றாங்க..! கொதிக்குற எண்ணெய்ய வீசுறாங்க..! சவூதிக்கு சென்ற முஸ்லீம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!
வங்காளதேச நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளார். இந்த பெண் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "என்னை கொடுமை படுத்துகிறார்கள். அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியில் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்னுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் தராமல் பட்டினி போடுகின்றனர்.
நான் நிறைய நாட்கள் உயிருடன் இருக்க மாட்டேன்.தயவுசெய்து காப்பாற்றுங்கள். முதலில் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்தேன் அங்கும் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்தேன். அடுத்து இந்த இடத்திற்கு வந்த போதும் பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள். கடந்த 15 நாட்களாக என்னை அறையில் அடைத்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் பேசி கொண்டிருந்தபோது அவருடைய முகத்தில் பயம் தெளிவாக தெரிந்தது. மேலும் சுடு எண்ணெயில் வைத்து ஏற்பட்ட காயங்களையும், அவர் வீடியோவில் காண்பித்துள்ளார்.
இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. வங்காள தேச மக்கள் இவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர். அந்நாட்டின் சமூக நல மையம் ஒன்று இவரை பத்திரமாக மீட்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் எடுத்துவருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில், சவுதி அரேபியா நாட்டிலிருந்து 110 பேர் வங்காளதேசத்திற்கு திரும்பி உள்ளதாகவும், அவர்களில் 61 சதவீதம் பேர் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், 14% பேர் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.