இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சேந்தமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயது 21 தான்..! திருமணமாகி ஒரு வருடம் தான்..! கர்ப்பமாக முடியவில்லை என நந்தினி செய்த நினைத்து பார்க்க முடியாத செயல்!

சேத்தமங்கலம் பேரூராட்சியில் காமராஜபுரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கோகுல் என்ற 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியில் கூலிதொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஓராண்டுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நந்தினியின் வயது 21.
இந்நிலையில் நேற்று திடீரென்று தன்னுடைய வீட்டின் அருகிலேயே நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோகுலுக்கு தகவல் தெரிவித்தனர். தன்னுடைய மனைவி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்ட பேரதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். பின்னர் தற்கொலை குறித்து அப்போது காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஓராண்டிற்குள்ளேயே பெண் தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவமானது சேத்தமங்கலம் பேரூராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.