இளம்பெண்ணுக்கு 17 வயதிலேயே திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை கர்ப்பமாக்கிய கணவன் மீது வழக்கு! அதிர வைக்கும் காரணம்!

பாகூரில் உள்ள கிருமாம்பாக்கம் என்னும் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் சாந்தி. இத்தம்பதியினருக்கு 17 வயது நிரம்பிய மகளுள்ளார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் இறந்துவிட்டார்.
1.5 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷின் மகளிருக்கு செல்போனில் தவறான நம்பர் மூலம் அழைப்பு வந்தது. அப்போது அந்த நபருடன் நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. அந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த சின்னையன் என்பவராவார்.
இவ்விருவருக்கும் 2018-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான பிறகு இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த இளம் பெண் கர்ப்பமானார். இதனால் தாய் வீட்டிற்கு அந்த இளம்பெண் வந்துள்ளார். பிரசவத்திற்காக புதுவை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இளம்பெண் சேர்க்கப்பட்டிருந்தார்.
நல்ல முறையில் பிரசவம் முடிந்து அந்த இளம்பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவம் செய்த மருத்துவர்களுக்கு இளம்பெண்ணின் வயதின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அப்போது காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இளம்பெண் மைனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் தாயார், தாத்தா மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது கிருமாம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.