நம்பி என்னையே அவனுக்கு கொடுத்தேன்..! ஆனால் படுக்கை அறையில் கேமரா வைத்து..! சென்னை இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்!

நம்பி என்னையே அவனுக்கு கொடுத்தேன் ஆனால் படுக்கை அறையில் கேமராவை வைத்து நாங்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டுகிறான் என்று மயிலாப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.


சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். 25 வயதாகும் அந்த இளம்பெண் அளித்த புகாரில், அவர் தேனாம்பேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 29) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் ராமச்சந்திரன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சத்தியமும் செய்து இருக்கிறார். இதனை நம்பி அந்த பெண்ணும் அவருடன் பல இடங்களில் சுற்றித் திரிந்து இருக்கிறார். அவ்வாறு இருந்த பொழுது பல முறை லாட்ஜில் ரூம் போட்டு இருவரும் உல்லாசம் ஆகவும் இருந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

அப்படியாக ராமச்சந்திரனும் அந்த இளம் பெண்ணும் ஜாலியாக இருந்த பொழுது பெண்ணிற்கே தெரியாமல் ராமச்சந்திரன் ஹோட்டல் ரூமில் செல்போன் மூலமாக அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். பின்னர் அந்த பெண்ணிடம் மெல்லமெல்ல பேசுவதை குறைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் முற்றிலுமாக பேச்சுவார்த்தையை நிறுத்தி இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு இதுபற்றி பேசி இருக்கிறார். அவர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். ஆகையால் இருவரும் இனி மேற்பட்ட தொடர்பில் இருக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து அந்த பெண் உங்களுக்கு திருமணம் ஆனாலும் பரவாயில்லை என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அவ்வாறாக அந்தப்பெண் ராமச்சந்திரனை கட்டாயப்படுத்திய பொழுது அவர் தன்னிடம் இருந்த வீடியோ ஆதாரத்தை காண்பித்து மிரட்டி இருக்கிறார். ராமச்சந்திரன் போலியாக தான் ஏமாற்றுகிறார் என்று எண்ணி அந்த பெண் அசால்டாக இருந்துள்ளார். மீண்டும் அவரை கட்டாயப்படுத்தி பொழுது சமூக வலைத்தளத்தில் அவர் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனால் அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்ததாக போலீஸ் அதிகாரியிடம் கூறியிருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தலைமறைவாகி இருக்கும் ராமச்சந்திரனை தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.