மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் நடந்த சம்பவம் மணிப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் இளம் கர்ப்பிணிக்கு பிரசவம்! தொப்புள் கொடியுடன் துடித்த குழந்தை! கேட்போரை உலுக்கச் செய்த சம்பவம்!

மணிப்பூரில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சில நாட்களுக்கு முன்னர் பெண்ணொருவரை பிரசவத்திற்காக அனுமதிக்க உறவினர்கள் அழைத்து சென்றனர். மருத்துவமனை நிர்வாகம் அவர்களை குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு பெண்ணை மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தியது.
ஆனால் அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. இதனால் அந்த பெண்னை மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்த்து கொள்ள அனுமதிக்கவில்லை. வேறொரு மருத்துவமனையில் சேர்க்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.
பெண்ணின் உறவினர்களும் வேறுவழியின்றி மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மருத்துவமனையின் வாயிலிலேயே அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையானது தொப்புள் கொடியுடன் வலியில் துடித்த சம்பவமானது அங்கிருந்த பொதுமக்களை பெரிதளவில் கலங்க வைத்தது. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவ குழுவினர் வந்து தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் பிரசவித்த பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமானது மணிப்பூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.