கல்யாணம் செஞ்சிக்குறேன்! கவலைப்படாத! நம்பி நெருங்கிப் பழகிய இளம் பெண்! காதலனால் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்!

காதலித்த பெண்ணை ஏமாற்றி இளைஞர் ஒருவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள ரெட்டிகுப்பத்தில் ராஜகோபால் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் பிரசாந்த். பிரசாந்தின் வயது 25. இவர் கொய்யாப்பழம் வியாபாரியாவார். அடிக்கடி கணிசபாக்கத்துக்கு கொய்யா பழங்கள் வாங்குவதற்காக செல்வார்.

அப்போது அவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆனந்தி என்ற 22 வயது பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக காதலித்து வந்தனர். தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக பிரசாந்த் உறுதியளித்ததால் ஆனந்தி பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

3 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். திடீரென்று சில வாரங்களுக்கு முன்னர் ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று பிரசாந்த் கூறியுள்ளார். இதைக்கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி பலமுறை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் பிரசாந்த் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, பண்ருட்டிக்கு அருகே அமைந்துள்ள கரும்பூர் கிராமத்தில் பிரசாந்துக்கு பெண் பார்க்கப்பட்ட செய்தியானது ஆனந்திக்கு தெரியவந்தது.

உடனடியாக ஆனந்தி விரைந்து சென்று பிரசாந்தின் வீட்டிற்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சம்பவமானது அப்பகுதி காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் ஆனந்தியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பிரசாந்த் சென்னைக்கு சென்று விட்டதாக அவருடைய பெற்றோர் கூறினர்.

பின்னர் ஆனந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பிரசாந்த் கூடிய விரைவில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.