விடாமல் துரத்தும் உறவுகள்..! வாழ வழி தெரியாமல் தவிக்கும் காதல் ஜோடி!

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பிற்காக காவல் நிலையம் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி எனும் இடம் அமைந்துள்ளது. இதனருகேயுள்ள கேதாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. இவருடைய வயது 21. இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் என்ற 25 வயது இளைஞனுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கம் ஏற்பட்டு 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களை சேர்த்துவைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த காதல் ஜோடி சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி இருவீட்டாருக்கும் தெரிய வந்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றெண்ணிய காதல் ஜோடி நேற்று காலை வேலூர் எஸ்.பி. ஆபீஸில் தங்களுக்கு பாதுகாப்பளிக்குமாறு தஞ்சம் புகுந்தனர்.

இந்த சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.