ஊரடங்கு நேரத்தில் தைலத் தோப்பில் மஜா..! காதல் ஜோடியை திணறத் திணற ஓட விட்ட ட்ரோன்..! எங்கு தெரியுமா?

ஊரடங்கை மதிக்காமல் இளம் காதல் ஜோடி காட்டுப்பகுதிக்குள் உல்லாசமாக இருந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் இன்றுவரை 1683 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 750 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா என்பதை காவல்துறையினர் கண்காணிப்பதற்காக ட்ரோன் உபயோகப்படுத்துகின்றனர். அவ்வப்போது இளைஞர்கள் ட்ரோனுக்கு பயந்து பதுங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதே போன்று ஒரு இளம் காதல் ஜோடி ஊரடங்கு கடைப்பிடிக்காமல், திருவள்ளூரில் காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியில் பறக்கவிடப்பட்ட ட்ரோன் இவர்களை கண்டுபிடித்தது. 

ட்ரோன் பறந்து செல்வதை பார்த்த காதல் ஜோடி வெட்கத்தில் தங்களுடைய முகத்தை மூடி அப்பகுதியிலிருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.