திருமணமாகி வெறும் 3 நாள்! கணவன் கண் முன் சடலமான இளம் மனைவி! தேனிலவு விபரீதம்!

வேலூர் மாவட்டம் ஏலகிரியில் தேனிலவுக்கு சென்று திரும்பிய இளம் தம்பதி விபத்தில் சிக்கியதில் மனைவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு கடந்த ஞாயிறன்று அதே பகுதியை சேர்ந்த திவ்யாவுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிகள் இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து மணிகண்டன் தனது பைக்கிலேயே புது மனைவி திவ்யாவை அழைத்துக் கொண்டு ஏலகிரி மலைக்கு தேனிலவுக்கு சென்றுள்ளார். 2 நாட்கள் தேனிலவு முடிந்த நிலையில் நேற்று மாலை ஏலகிரியில் இருந்து பெருமாள் பேட்டைக்கு தம்பதி திரும்பியுள்ளது.

மணிகண்டன் டூவீலரை ஓட்டி வர திவ்யா பின்னால் அமர்ந்திருந்தார். ஏலகிரி மலையின் 9வது வளையில் திரும்பும் போது திடீரென மணிகண்டன் கட்டுப்பாட்டை பைக் இழந்துள்ளது. மேலும் அங்கிருந்து தடுப்புச் சுவற்றில் பலமாக மோதியுள்ளது.

இதனால் பின்னால் அமர்ந்திருந்த திவ்யா தூக்கி வீசப்பட்டுள்ளார். மேலும் கீழே விழுந்ததில் அவர் தலையில் பலத்த அடி பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவன் மணிகண்டன் உடல் முழுவதும் காயங்களுடன் உயிர் தப்பினார். 

ஆனால் மனைவி தன் அருகே இறந்து கிடப்பதை பார்த்து மணிகண்டன் கதறி அழுதார். இது காண்போரை கலங்க வைத்தது.