வரும் டிசம்பர் மாதத்துடன் அழிகிறதா உலகம்..! அதிசய ஜோதிட சிறுவன் அபிக்யாவின் பகீர் கணிப்பு..! என்ன தெரியுமா?

கொரோனாவை விட மோசமான நிகழ்வை 2020 டிசம்பர் மாதம் இந்த உலகம் சந்திக்கும் என இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் எச்சரித்திருக்கிறார்.


இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் ஆவார். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். இவர் சிறுவயதிலேயே வானவியல் சாஸ்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். தன்னுடைய துல்லியமான கணிப்புகள் மூலம் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் இந்த சிறுவன்.

இந்த சிறுவன் தனக்கென்று யூடியூப் சேனல் ஒன்றை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதில் ஜோதிடம் மற்றும் வானவியல் சம்பந்தமான செய்திகளையும் தன்னுடைய நேயர்களுக்கு பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவருடைய வீடியோ விற்காக பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சிறுவன் அபிக்யா ஆனந்த் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதியதாக வீடியோ ஒன்றை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டார். அந்த வீடியோவில் 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2020 ஏப்ரல் வரை மிகப்பெரிய வைரஸ் தொற்று கொண்டு உலகையே அச்சுறுத்த காத்துக்கொண்டிருக்கிறது என கூறினார். 

 சந்திரனும் ராகுவும் ஒன்றாக சேரும் பொழுது எச்சில் மூலமாக அதிகமாக பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் என்று சிறுவன் கூறியிருக்கிறார். வைரசுக்கும் மனிதனுக்கும் இடையேயான போர் இந்த கால கட்டத்தில் நடைபெற போகிறது என அவர் எச்சரித்திருக்கிறார். அதேபோல் இந்த வைரஸ் தொற்றினால் உலக நாடுகளில் பணக்கார நாடுகளாக கருதப்படும் பல நாடுகள் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க கூடும் எனவும் அவர் கணித்துக் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த வைரஸின் தாக்கம் வரும் மே மாதம் 29ம் தேதியில் முடிவுக்கு வரும் என்று அந்த சிறுவன் கூறியிருக்கிறார். தற்போது இந்த சிறுவன் கொரோனாவை விட மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் நம்முடைய உலகிற்கு உள்ளது என்று தன்னுடைய புதிய வீடியோ பதிவில் கூறியிருக்கிறார். 

அதாவது இளம் ஜோதிடரான அபிக்யா கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரப்போகிற புதிய ஆண்டில் உலகம் சந்திக்கப் போகிற பிரச்சினைகள் குறித்து வீடியோ பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி உலகிற்கு மற்றொரு மிகப்பெரிய பேரழிவு காத்துக் கொண்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

2020 டிசம்பர் மாதம் நிகழப்போகும் இந்த பேரழிவு அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கும் என இளம் ஜோதிடர் அபிக்யா கூறியிருக்கிறார். இந்த பேரழிவு கொரோனா தொற்றை விட மிகக் கொடியதாக இருக்கக்கூடும் என அவர் கூறியிருக்கிறார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டினால் மட்டுமே இதில் இருந்து நம்மால் விடுபட முடியும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் உயிரினங்களை கொல்வதையும் இறைச்சிகளை உண்பதையும் மனிதர்கள் நிறுத்தவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்தின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.