கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிடோரின் கேரவன் செலவுக்காக 1800 கோடி ரூபாய் செலவிட்டதாக எழுதி வைத்த டைரி சிக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி செலவு! எடியூரப்பா குறித்து திடுக் தகவல்!

பா.ஜ.க. மூத்த தலைவர்கள், உயர்மட்டக் குழுவினர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கர்நாடக மாநிலத்துக்கு வந்தபோது அவர்களின் கேரவன் செலவுக்காக 1800 கோடி ரூபாய் செலவிட்டதாக 2009-ஆம் ஆண்டு டைரியில் எடியூரப்பா கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதாகவும், வருமான வரித்துறையில் இருந்த அந்த டைரியின் விவரங்கள் தங்களிடம் சிக்கியதாகவும் பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்டிருந்தது.
அதில் மூத்த அமைச்சர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இதனைக் கிண்டல் செய்யும் வகையில் காங்கிரஸ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது "அன்புக்குரிய டைரியே நான் செய்த ஊழல் நாட்டுக்குத் தெரிந்து விட்டது; மற்ற திருடர்களை காப்பாற்றுவது போல சவுக்கிதார் என்னையும் காப்பாற்றுவார் " என டியூரப்பா கூறுவது போல அந்தப் பதிவு அமைந்திருந்தது.
மேலும் இது தொடர்பாக பிரதமர் உள்ளிட்ட அனைவர் மீது புதிதாக நியமிக்கப்பட்டுள்ல லோக்பாலைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ள நிலையில், தனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது என்றும் அது தனது கையேழுத்தே அல்ல என்றும் எடியூரப்பா மறுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தோல்விகளைச் சந்திக்கத் தொடங்கியதில் இருந்து பொய் வலைகள் பின்னுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.