எம பயம் போக்கும் யமாஷ்டகம். இந்த ஸ்லோகத்தை தினமும் துதிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் விலகிவிடும்.

சாவித்திரி காரடையான் நோன்பு நூற்று யமதர்மராஜனை துதித்த ஸ்துதி - யமாஷ்டகம்


தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா

தர்மம் ஸூர்ய: ஸுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம். .

சூரியதேவன், தருமத்தைக் குறித்துத் தவம் செய்து, தங்களைப் பெற்றதால், தர்மராஜர் எனப் பெயர் பெற்ற தங்களை நமஸ்கரிக்கிறேன்.

ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண:

அதோ யந்நாம சமனம் இதி தம் ப்ரணமாம்யஹம் .

எல்லா உயிரினங்களையும் சமமாகப் பார்க்கும் தாங்கள், இவ்வுலகமனைத்திலும் நடைபெறும் செயல்களுக்கு சர்வ சாக்ஷியாக இருக்கிறீர்கள். அதனால் சமன் எனப் பெயர் பெற்ற உம்மை வணங்குகிறேன்.

யேனாந்தாச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்

கர்மானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம் .

காலத்திற்கேற்ப, அனைத்து உயிரினங்களையும் நாசம் செய்யும் கர்மரூபியாக இருப்பதால், கிருதாந்தகன் எனப் பெயர் பெற்ற தங்களை நமஸ்கரிக்கிறேன்.

பீர்பர்திதண்டம் தண்டாய பாபினம் சுத்திஹேதவே

நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வ ஜீவினாம் .

பாவிகளைச் சுத்தம் செய்வதற்காக, தண்டாயுதம் தரித்திருப்பதால், தண்டதரன் எனப் பெயர் கொண்ட உம்மை வணங்குகிறேன்.

விச்வம் ச கலயத்யேவ யஸ்ஸர்வேஷு ச ஸந்ததம்

அதீவ துர்நிவார்யம் ச தம் காலம் ப்ரணமாம்யஹம் .

இவ்வுலகம் அனைத்திலும், சர்வக்ஞராக இருப்பதால், காலன் எனப் பெயர் பெற்ற உம்மை வணங்குகிறேன்.

தபஸ்வி ப்ரஹ்மநிஷ்டோ ய : ஸம்யமீ ஸன்ஜிதேந்த்ரிய:

ஜீவானாம் கர்ம பலத: தம் யமம் ப்ரணமாம்யஹம் .

தவத்தில் சிறந்தவராகவும், இந்திரியங்களை ஜெயித்தவராயும், ஜீவர்களுக்கு கர்மபலனைக் கொடுப்பவராகவும் இருப்பதால், யமன் எனப் பெயர் பெற்ற தங்களை வணங்குகிறேன்.

ஸ்வாத்மாரமச்ச ஸர்வஞ்ஜோ மிதரம் புண்யக்ருதம் பவேத்

பாபினாம் க்லேசதோ நித்யம் புண்யமிதரம் நமாம்யஹம் .

தம் ஆத்மாவையே தோட்டமாக உடையவராகவும், பாவம் செய்கிறவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பவராகவும், புண்ணிய ஆத்மாக்களின் நண்பராகவும் இருக்கிறபடியால், புண்ணியமித்திரன் எனப் பெயர் பெற்ற தங்களை வணங்குகிறேன்.

யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரஹ்மதேஜஸா

யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம் .

பிரம்மனின் அம்சமாகவும், பிரம்ம தேஜஸால் ஜொலிப்பவராகவும் பரப்பிரம்மத்தைத் தியானிக்கும் ஈசராகவும் இருக்கும் தங்களை நமஸ்கரிக்கின்றேன்.

யமாஷ்டகமிதம் நித்யம் ப்ரதருத்தாய ய: படேத்

யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வபாபாத் விமுச்யதே

பரம பவித்திரமான இந்த யமாஷ்டகத்தை யார் தினமும் பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ, அவர்களுக்கு யமபயம் நீங்கும். எல்லா பாவங்களும் விலகிவிடும். எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவர்களும் இதைப் பாராயணம் செய்தால், யமதண்டனையிலிருந்து விடுபடுவார்கள் என்பது ஸர்வ நிச்சயம்.