பிரபல நடிகையிடம் பேச வேண்டும் என்று பொதுமக்கள் பலர் மற்றொருவருக்கு தினமும் கால் செய்யும் அவலமானது சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.
வாணி போஜன் வேணும்..! நள்ளிரவில் ரியல் எஸ்டேட் அதிபரை புரோக்கராக மாற்றிய சபல கேஸ்கள்!
பிப்ரவரி 14-ஆம் தேதியன்று "ஓ மை கடவுளே" என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒரு காட்சியில் வாணிபோஜன் தன்னுடைய செல்போனில் அசோக்செல்வனிடம் கொடுப்பார். அந்த செல்போன் எண் தான் வாணி போஜனின் உண்மையான செல்போன் எண் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு ரசிகர்கள் பலர் தினமும் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
உண்மையில் சினிமாவில் கூறப்பட்ட செல்போன் என்னானது, பூபாலன் என்ற ரியல் எஸ்டேட் நிபுணராவார். அவருக்கு பொதுமக்கள் பலர் தினமும் கால் செய்து வாணி போஜனிடம் பேச வேண்டும் என்று தொந்தரவு செய்து வந்துள்ளனர். தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்த இயலாத பூபாலன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
அவர் இன்று காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதாவது, "தான் பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணிற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. அவர்கள் அனைவரும் நடிகை வாணி போஜனிடம் பேச வேண்டும் என்று தொந்தரவு செய்கின்றனர். ஆகையால் என்னுடைய அனுமதியின்றி என் செல்போன் எண்ணை பகிர்ந்ததற்காக அந்த படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.