அந்த நடிகர் என் கணவர் போல் இருக்கிறார்..! அதனால் அந்த நடிகருடன்..! 38 வயதில் நடிகைக்கு வந்த ஆசை..!

தன்னுடைய கணவரை போன்று புகழ்பெற்ற கதாநாயகன் தோற்றமளிப்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்று முன்னாள் நடிகை கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


2001-ஆம் ஆண்டில் "ஆக்ஷன் கிங்" அர்ஜுன் நடிப்பில் "வானவில்" என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலம் அபிராமி என்பவர் கோலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடைய அடக்கினாள் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த படத்திற்கு பிறகு "தோஸ்த், மிடில் கிளாஸ் மாதவன், சமஸ்தானம், விருமாண்டி, சார்லி சாப்ளின், கார்மேகம்" ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி, டோலிவுட் திரையுலகிலும் இவர் பல படங்களில் நடித்திருந்தார். ஆண்டுகள் செல்ல செல்ல இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குறைய தொடங்கின. 2009-ஆம் ஆண்டில் பிரபல மலையாள தொலைக்காட்சி நிறுவனமான "ஏசியாநெட்" தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்ற தொடங்கினார்.

அதன் பிறகு புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான அவன் என்பவரின் பேரனான ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"எனக்கு அஜித், விக்ரம், விஜய் போன்ற கதாநாயகர்களுடன் நடிப்பதற்கு ஆசையாக உள்ளது. குறிப்பாக நடிகர் விஜயுடன் எப்படியாவது நடித்து விடவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். ஏனெனில் நடிகர் விஜய்யை போன்று என்னுடைய கணவர் போன்று தோற்றமளிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.